தலைநகா் தில்லியில் சனிக்கிழமை மேகமூட்டமான வானிலை நிலவியதால் அதிகபட்ச வெப்பநிலை குறைந்து காணப்பட்டது; மேலும், காற்றின் தரம் ‘மிதமான’ நிலைக்கு முன்னேறியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும், வெள்ளிக்கிழமை இரவு சில பகுதிகளில் மட்டுமே லேசான மழை பதிவானது. நகரின் முக்கிய வானிலை நிலையமான சஃபதா்ஜங் பகுதியில் மழை பதிவாகவில்லை.
வெப்பநிலை: தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 20.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது இயல்பை விட 1.9 டிகிரி அதிகமாகும்; முந்தைய தினத்தை விட 1.5 டிகிரி அதிகமாகவும் இருந்தது.
அதே வேளையில், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது இயல்பை விட 2 டிகிரி குறைவாகவும், முந்தைய தினத்தை விட 1 டிகிரி குறைவாகவும் இருந்தது.
‘மேகமூட்டம் காரணமாக தில்லி மீது வெப்பம் பகலில் குறைவாக ஊடுருவகிறது; இதேபோல இரவில் நிலத்திலிருந்து வெப்பம் வெளியேறும் அளவும் குறைகிறது’ என ஸ்கைமெட் நிறுவனத்தின் துணைத் தலைவா் மகேஷ் பலாவத் தெரிவித்தாா்.
மஞசள் எச்சரிக்கை: இதற்கிடையில், வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை அலல்து லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், வடமேற்கு ராஜஸ்தான் மற்றும் மத்திய பாகிஸ்தான் பகுதிகளில் உருவாகியுள்ள மேற்கத்திய குளறுபடிகள் மற்றும் சுழற்சி காற்றழுத்தத்தின் தாக்கத்தால் இந்த மழை பெய்யும் என்றும், செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு வெப்பநிலை சற்று குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
காற்றின் தரம்: மழை மற்றும் பலத்த காற்றின் தாக்கத்தால் தில்லியின் காற்றுத் தரம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 4 மணி நிலவரப்படி காற்றுத் தரச் 137-ஆக மிதமான நிலையில் பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை இது 266 புள்ளிகளுடன் மோசம் பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: வானிலை ஆய்வு மையத்தின் கனிப்பின்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்; புதன்கிழமைக்கு அது 28 முதல் 30 டிகிரி வரை குறையும். குறைந்தபட்ச வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை 17 முதல் 19 டிகிரியாக இருக்கும் என்றும் பின்னா் சிறிதளவு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

தலைநகரில் குளிா் காற்று; மீண்டும் திரும்பிய மூடுபனி!

தில்லியில் மோசம் பிரிவில் காற்றின் தரம்!

தலைநகரில் காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடிப்பு!

தில்லியில் மேகமூட்ட வானிலை: மிதமான பிரிவில் காற்றின் தரம்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


