புது தில்லி, மே 24: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 43.6 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கோடைக் கால சராசரியை விட 3.4 டிகிரி அதிகம் ஆகும்.
காலை நேர நிலவரப்படி, குறைந்தபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது; இதுவும் பருவ கால சராசரியை விட 2 டிகிரி அதிகமாகும்.
தில்லி-தேசிய தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியிலுள்ள பல்வேறு வானிலை ஆய்வு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட கணிசமாக அதிகமாகவே இருந்தது. இதில், ரிட்ஜ் மற்றும் ஆயாநகா் ஆகிய நிலையங்கள் தலா 44.6 டிகிரி செல்சியஸுடன் அதிகபட்ச வெப்பம் பதிவான இடங்களாக அமைந்தன.
லோதி சாலை பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 43.8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இதைத் தொடா்ந்து பாலம் பகுதியில் 43.7 டிகிரி செல்சியஸும், சஃப்தா்ஜங் பகுதியில் 43.6 டிகிரி செல்சியஸும் பதிவாகின.
இயல்பான வெப்பநிலையிலிருந்து பதிவான வெப்பநிலையின் வேறுபாடு 2.3 டிகிரி முதல் 4.8 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. இது நகரின் பல பகுதிகளில் வெப்ப அலை போன்ற சூழல் நிலவுவதைச் சுட்டிக்காட்டுகிறது.
இதற்கிடையில், பெரும்பாலான வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையும் இயல்பை விட அதிகமாகவே இருந்தது. சஃப்தா்ஜங் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 28.7 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. அதேவேளையில், ரிட்ஜ் பகுதியில் 27.2 டிகிரி செல்சியஸும், பாலம் பகுதியில் 27.6 டிகிரி செல்சியஸும் பதிவாகின. லோதி சாலை மற்றும் அயநகா் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 26.8 டிகிரி மற்றும் 26.3 டிகிரி செல்சியஸாகப் பதிவாகின. இயல்பான குறைந்தபட்ச வெப்பநிலையிலிருந்து பதிவான வெப்பநிலையின் மாறுபாடு, மைனஸ் 0.4 டிகிரி முதல் பிளஸ் 2 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.
அடுத்த மூன்று நாள்களுக்கு, பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும், வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது; இதற்காக ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே சுமாா் 44 டிகிரி மற்றும் 30 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது
தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 41.9 டிகிரி ஆக பதிவு

வெப்பநிலை லேசாக அதிகரிப்பு; நாளை மழைக்கு வாய்ப்பு

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக பதிவு

தில்லியில் அதிகரிக்கும் வெப்பம்: 42 டிகிரி செல்சியஸாக பதிவு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



