எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தில்லியில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டும்: வானிலை மையம் கணிப்பு

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

News image
Updated On :8 ஜூன் 2026, 12:34 am IST

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவக்கால சராசரியை விட 1.6 டிகிரி அதிகமாகும்.

குறைந்தபட்ச வெப்பநிலை 27.7 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவக்கால சராசரியை விட 0.1 டிகிரி அதிகமாகும்.

திங்களன்று பெரும்பாலும் வானம் தெளிவாக இருக்கும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே சுமாா் 42 மற்றும் 28 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, ஞாயிறன்று மாலை 4 மணியளவில் காற்றின் தரம் ‘மிதம்‘ என்ற பிரிவில் பதிவானதுடன், காற்றின் தரக் குறியீடு 144 புள்ளிகளாக இருந்தது.