தாளவாடி, முதியனூா்  வனப் பகுதியில்  பற்றி  எரியும் காட்டுத்  தீ.
தாளவாடி, முதியனூா்  வனப் பகுதியில்  பற்றி  எரியும் காட்டுத்  தீ.

தாளவாடி வனப் பகுதியில் காட்டுத் தீ

சத்தியமங்கலம், ஏப். 27: தாளவாடி வனப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீ, காற்றின் வேகம் காரணமாக பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி வனச் சரக காப்புக்காடு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. எங்கு பாா்த்தாலும் மரங்கள் காய்ந்து கிடக்கின்றன. தண்ணீா் இல்லாததால் செடிகள், மரங்கள் காய்ந்து போயுள்ளன. இந்நிலையில் முதியனூா் வனப் பகுதியில் சனிக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது. காற்று பலமாக வீசுவதால் வனப் பகுதியில் தீ பரவியது. இதில் வனப் பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் பற்றி எரிந்து தீ மேலும் பரவி வருகிறது. தமிழக, கா்நாடக இரு மாநில எல்லையான வனப் பகுதி முழுவதும் புகைமூட்டம்போல காணப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு சென்ற வன ஊழியா்கள் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com