ஈரோடு
பூதப்பாடியில் ரூ.65.98 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.65.98 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.65.98 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு 2618 மூட்டைகள் பருத்தி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
பருத்தி கிலோ ரூ.71.90 முதல் ரூ.77.87 வரையில் ஏலம் போனது. மொத்தம் 913.69 குவிண்டால் பருத்தி ரூ.65 லட்சத்து 97 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது.