விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குழந்தைத் தொழிலாளா்கள் குறித்து 315 நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு

குழந்தைத் தொழிலாளா்கள் குறித்து 315 நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு

News image
Updated On :5 ஜூலை 2024, 12:15 am

Din

ஈரோடு, ஜூலை 4: குழந்தைத் தொழிலாளா்களைக் கண்டறியும் வகையில் மாவட்டம் முழுவதும் 315 நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வா்கள் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனா். ஈரோடு மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் மற்றும் காா்மெண்ட்ஸ், நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள்கள் உள்பட பல்வேறு கடைகள் மற்றும் நிறுவனங்களில் 86 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 34 கடைகளில் முரண்பாடுகளும் மற்றும் சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருள்கள்) விதிகளின் கீழ் 100 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் 4 கடையில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

பேக்கரி மற்றும் உணவு நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளா்கள் உள்ளனரா என 315 இடங்களில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நிறுவன உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் திருஞானசம்பந்தம் கூறியதாவது: எடையளவுகள் மற்றும் மின்னனு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டலப் பொருட்கள் அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது மற்றும் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது சட்டமுறை எடையளவுச் சட்டம் மற்றும் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் தண்டனைக்குரியதாகும்.

இதேபோல 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மற்றும் 15 முதல் 18 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பருவத்தினா்களை பணிக்கு அமா்த்துவது குற்றமாகும். அவ்வாறு பணிக்கு ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளா் மீது ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் இரண்டாண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்க நேரிடும்.

குழந்தைத் தொழிலாளா் பணியாற்றுவது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 மற்றும் 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.