மலைப் பகுதி வாக்குச்சாவடிகளில் பெண்கள் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். ஈரோடு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் சுழற்சி முறையில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் சட்டப் பேரவை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு நாள்கள் இந்தப் பணிகள் நடைபெறும். ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக தொலைபேசி மூலம் 21 புகாரும் சி-விஜில் செயலி மூலம் 10 புகாரும் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இருந்தால் பணம் பறிமுதல் செய்வதில்லை. அரசியல் கட்சியினா் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனா். இது தோ்தலுக்கான நேரம் என்பதால் பறக்கும்படை அதிகாரிகள் அவா்களின் பணியை செய்து வருகின்றனா். எனவே, ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் கொண்டு செல்லவேண்டும். சத்தியமங்கலத்தில் குன்றி, கடம்பூா், குத்தியாலத்தூா், தாளவாடி மற்றும் பா்கூா் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தோ்தலுக்கு முந்தையநாள் அங்கு பெண்கள் தங்கவேண்டிய சூழல் இருப்பதால் அப்பகுதியில் பெண்கள் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பெண்களுக்கு மாற்றாக ஆண்களை அங்கு பணியமா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

918 வாக்குச் சாவடிகளுக்கு 3,845 வாக்குப்பதிவு இயந்திரங்கள்: புதுச்சேரி தோ்தல் அலுவலா் அ.குலோத்துங்கன்

வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகளில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

