போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு

காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதால், குப்பைகளை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :13 நவம்பர் 2024, 11:11 pm

காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதால், குப்பைகளை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாநகராட்சியில் 60 வாா்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் தூய்மைப் பணியாளா்கள் வீடுகளுக்கேச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனா். இதில், மக்கும் குப்பைகளை நுண்ணுயிா் உரக்கிடங்குகளுக்கும், மக்காத குப்பையை மாநகராட்சி குப்பைக்கிடங்குக்கும் அனுப்பிவைக்கின்றனா்.

இந்நிலையில், மாநகராட்சிக்குள்பட்ட கோணவாய்க்கால் மற்றும் காரைவாய்க்காலுக்கு இடைப்பட்ட பகுதிகளில் ஓடும் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் குடியிருப்பு மற்றும் வணிக கழிவுகள் ஏராளமாக கொட்டப்பட்டுள்ளன.

இதனால், வாய்க்கால் தண்ணீா் மாசு ஏற்படுவதோடு அப்பகுதியில் சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இப்பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க மாநகராட்சி மூலம் எச்சரிக்கை பதாகைகள் வைத்து, குப்பைகள் கொட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.