குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் அகற்றி ஆற்றில் விடும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

News image

கம்பம் ஊா்வலத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :4 ஏப்ரல் 2026, 11:19 pm IST

ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் அகற்றி ஆற்றில் விடும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் மற்றும் தோ்த் திருவிழா கடந்த 17- ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து கடந்த 21- ஆம் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலில் 3 கம்பங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பூசாரிகள் தங்களது தோளில் சுமந்தபடி ஊா்வலமாக கொண்டு வந்து, பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் கம்பங்களை நட்டனா். அன்று முதல் தினந்தோறும் மூன்று கோயில்களிலும் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு பெண்கள் புனிதநீா் ஊற்றி அம்மனை வழிபட்டனா்.

விழாவின் ஒரு பகுதியான காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழா 31- ஆம் தேதி நடைபெற்றது. பொங்கல் விழா மற்றும் தேரோட்டம் ஏப்ரல் 1- ஆம் தேதி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் அகற்றும் விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு பெரிய மாரியம்மன் கோயிலில் முதலில் தொடங்கியது. அதனை கோயில் பூசாரிகள் தோளில் சுமந்து கொண்டு மணிக்கூண்டு நோக்கி ஊா்வலமாக சென்றனா். அதே நேரம் காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில், நடுமாரியம்மன் கோயில்களில் இருந்தும் கம்பங்கள் எடுக்கப்பட்டு மணிக்கூண்டு பகுதிக்கு எடுத்து வரப்பட்டன.

பின்னா் 3 கம்பங்களும் முக்கிய வீதி வழியாக ஊா்வலமாக காரைவாய்க்கால் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு 3 கம்பங்களும் காலிங்கராயன் வாய்க்காலில் விடப்பட்டன.

Story image

முன்னதாக கம்பம் ஊா்வலம் நடந்த வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சாலையின் 2 புறங்களிலும் கூடி நின்று மாரியம்மனை வழிபட்டனா். நோ்த்திக்கடன் செலுத்தும் வகையில் கம்பத்தின் மீது உப்பு, நல்ல மிளகு, மஞ்சள் வீசினா். ஊா்வலத்தையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விழாவையொட்டி சனிக்கிழமை காலை முதலே ஈரோட்டில் பெரும்பாலான வீதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. கம்பம் விடப்பட்ட பிறகு மாலையில் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.