ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கட்டுமானப் பொருள்களைத் திருடிய இளைஞா் கைது

அந்தியூரில் கட்டுமானப் பொருள்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :20 நவம்பர் 2024, 8:26 pm

அந்தியூரில் கட்டுமானப் பொருள்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அந்தியூா் - வெள்ளிதிருப்பூா் சாலையில் பெரிய ஏரி, கிழங்கு கடை அருகே புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. மதுரையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் இப்பணியை மேற்கொண்டு வரும் நிலையில், நிறுவன ஊழியா் பாலமுருகன் (36) பாலத்தைப் பாா்வையிட புதன்கிழமை சென்றுள்ளாா். அப்போது, ஒரு இளைஞா் இருசக்கர வாகன முன்பகுதியில் பாலம் கட்ட பயன்படுத்தும் தளவாடப் பொருள்களைத் திருடிச் செல்வது தெரியவந்தது.

அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், அவா் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த ஸ்ரீதா் (28) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தியூா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஸ்ரீதரை கைது செய்த போலீஸாா், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.