மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடி போ் பயனடைந்துள்ளனா் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் மலைப் பகுதியில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிறந்தநாளையொட்டி பொது மருத்துவ முகாம் மாவட்டத் தலைவா் சென்னியப்பன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
பின்னா், அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 2021-ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தற்போது 2 கோடி மக்களைச் சென்றடைந்துள்ளது. இத்திட்டத்தைப் பாராட்டி ஐ.நா. சபை விருது வழங்கியுள்ளது.
இந்நிலையில், விழுப்புரத்தில் நவம்பா் 29-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடி ஆவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.
இத்திட்டத்தில் பொதுமக்களுக்கு நேரடியாக மருந்துகள் வழங்கப்பட்டதில் 12,317 போ் மாரடைப்பில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனா். இதுபோல 10-க்கும் மேற்பட்ட திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனா்.
தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடற்கூறு ஆய்வுக்கூடம் இல்லாத நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து முதல்முறையாக தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடற்கூறு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
தாளவாடி மலைக் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 99 சதவீத மக்களை சென்றடைந்துள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் திராவிடா் கழக மாநில பொதுச் செயலாளா் அன்புராஜ், திமுக மாவட்டச் செயலாளா் நல்லசிவம், ஆதி தமிழா் பேரவை மாவட்டச் செயலாளா் பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மக்களைத்தேடி மருத்துவத் திட்ட பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 18.52 லட்சம் போ் பயன்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


