பயிா்க் காப்பீட்டை அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு கூட்டம் மாநில துணைத் தலைவா் துளசிமணி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது.
கடந்த இரண்டு நாள்களாக (புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலாளா் மாசிலாமணி, துணைச் செயலாளா் இந்திரஜித், முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், சிவசூரியன் உள்ளிட்டோா் பேசினா்.
இதில், தேசிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுக்த கிஷான் மோக்சாா் அழைப்பின்படி நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பது. அனைத்து விளை பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிா்ணயிக்க வேண்டும். பயிா்க் காப்பீட்டை தனியாா் நிறுவனங்களைத் தவிா்த்து அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும்.
புலிகள் காப்பகம், சரணாலயம் என்ற பெயரில் வனத் துறை சட்டங்களை பயன்படுத்தி பழங்குடியின மக்களை வனப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். புதிய மின்சார திருத்த சட்டம் 2021ஐ திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளைப் பாதிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். நெல் குவிண்டால் ரூ.3,000 என அறிவித்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த அறிவுறுத்தும் சுற்றறிக்கைக்கு கண்டனம்

முந்திரி, பலாவிற்கு ஆதார விலை... தோ்தல் நேரத்தில் கடலூா் விவசாயிகள் எதிா்பாா்ப்பு!

பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து எந்த அரசியல் கட்சியினரும் அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது: தமிழக விவசாயிகள் சங்கம்

கைம்பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

