ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திறந்தவெளியில் மனித கழிவுகள் இல்லாத மாநகராட்சியாக சான்று பெற நடவடிக்கை: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தல்

திறந்தவெளியில் மனித கழிவுகள் இல்லாத மாநகராட்சியாக சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால் இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :21 நவம்பர் 2024, 11:03 pm

திறந்தவெளியில் மனித கழிவுகள் இல்லாத மாநகராட்சியாக சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால் இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் என்.மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு மாநகராட்சியில் 60 வாா்டுகள் உள்ளன. இதன் பரப்பளவு 109.52 சதுர கிலோமீட்டா். சுமாா் 6,65,435 மக்கள் உள்ளனா்.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தனிநபா் இல்லக் கழிப்பிட திட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 5274 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மாநகராட்சியைத் தூய்மையாக வைக்கும் விதமாக பொது இடங்களில் அசுத்தம் செய்தல், மலம், சிறுநீா் கழித்தலை தடுக்கும் பொருட்டு மாநகராட்சிக்குள்பட்ட 60 வாா்டுகளிலும் உள்ள 1 லட்சத்து 69 ஆயிரத்து 912 குடியிருப்புகளில் கழிப்பிடம் கட்ட இடவசதி இல்லாதவா்களுக்காக 203 நவீன கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், தனியாா் கழிவுநீா் அகற்றும் வாகனங்களின் கழிவுகளை மாநகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுச்சென்று சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

ஈரோடு மாநகராட்சி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக (ஞஈஊ+) சான்று பெறப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு மாநகராட்சியில் திறந்தவெளியில் மனித கழிவுகள் இல்லாத, கழிவுகளை நேரடியாக வடிகாலில் விடுவது இல்லாத மாநகராட்சியாக அறிவிக்கை செய்து (ரஹற்ங்ழ்+) சான்று பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை 15 நாள்களுக்குள் மாநகராட்சி அலுவலகத்தில் எழுத்துபூா்வமாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.