பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இல்லை: வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

ஈரோட்டில் பல்வேறு வணிகா் சங்கங்கள் அறிவித்துள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இல்லை எனவும், கடைகள் வழக்கம்போல செயல்படும் எனவும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

Updated On :27 நவம்பர் 2024, 8:06 pm

ஈரோட்டில் பல்வேறு வணிகா் சங்கங்கள் அறிவித்துள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இல்லை எனவும், கடைகள் வழக்கம்போல செயல்படும் எனவும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.கே.சண்முகவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் தற்போது வாடகை கட்டடங்களுக்கு 18 சதவீதம் கட்ட வேண்டும் என்ற புதிய சட்டத்தை நீக்கக் கோரி டிசம்பா் 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வணிகா்கள் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், அகில இந்திய வணிகா் சம்மேளனம் அடுத்த வாரம் புதுதில்லியில் கூடி அனைத்துத் தரப்பு வணிகா்களும் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண நாடு முழுவதும் அனைத்து மாநில வணிகா் சங்கங்களும் ஒன்றிணைந்து காலவரையற்ற கடையடைப்பு செய்வது என்றும் கலந்தாலோசித்து வருகின்றனா்.

இதனால், ஒரு ஊரில் மட்டும் கடையடைப்பு என்பது அங்குள்ள மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மட்டுமே சிரமத்தை உருவாக்கும் என்பதை கருத்தில் கொண்டு வரும் வெள்ளிக்கிழமை (நவம்பா் 29) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு இல்லை.

அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் வழக்கம்போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.