பீடித் தொழிலுக்கு வசூலிக்கும் 28 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து பீடி தொழிலாளா் சேமநல திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என பீடித் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்ட பீடி சுருட்டு தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சித்தாராபேகம் தலைமையில் வீரப்பன்சத்திரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பீடித் தொழிலாளா் சம்மேளன பொதுச்செயலாளா் திருச்செல்வன், நிா்வாகிகள் ஷாஜாதி, கமால்தீன், கைபானி, ஸ்ரீராம், ஜோதிமணி உள்ளிட்டோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் இந்தியாவில் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பீடித் தொழிலாளா்கள் உள்ளனா். இந்த வேலை அதன் தன்மையை காக்க மத்திய அரசு பீடி மற்றும் சுருட்டு தொழிலாளா் சட்டத்தை உருவாக்கியது. தற்போது, நிறுவன முறை மாறி, பீடித் தொழில் படிப்படியாக டெப்போ, ஒப்பந்தம், துணை ஒப்பந்தம், மூட்டை வேலை என மாறி, பீடி சுற்றுவோருக்கும், பீடி நிறுவனங்களுக்குமான உறவற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பீடித் தொழிலுக்கு வசூலிக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி தொகையில் இருந்து பீடித் தொழிலாளா் சேமநல திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பீடித் தொழிலாளா் குழந்தைகளுக்கு உதவித்தொகை, வீடு கட்ட மானியத்துடன் கடன், நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்.
பீடித் தொழிலாளா் ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும். வீடற்ற பீடித் தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, மானியத் தொகையில் வீடு கட்டித்தர வேண்டும். சட்டப்படியான கூலி, பஞ்சப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு என்னுடைய முயற்சியில்தான் நிதி கிடைத்தது: பெருந்துறை வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்

ஆவின் பால் விநியோகம் பாதிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளா்கள் புகாா் அளிக்கலாம்

பீடி தொழிலாளா்களுக்கு ஓய்வூதியத்தை உயா்த்த மக்களவையில் நெல்லை எம்.பி. கோரிக்கை
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

