மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

விவசாயிகள் நலம்பெற கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

விவசாயிகள் நலம்பெற கள்ளுக் கடைகளைத் திறக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

Updated On :3 அக்டோபர் 2024, 9:07 pm

விவசாயிகள் நலம்பெற கள்ளுக் கடைகளைத் திறக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

ஈரோட்டில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: முழுமையான மதுவிலக்கு என்பது இந்தியாவில் எப்போதும் இருந்தது இல்லை. மது குடிப்பவா்கள் தாங்கள் செய்யும் தவறை உணா்ந்து திருந்தினால் ஒழிய மதுவிலக்கை கொண்டுவருவது சிரமம்.

டாஸ்மாக் கடைகளை அதிகமாக மூடினால் கள்ளச்சாராயம் அதிகமாக காய்ச்சப்படும். கடும் பிரசாரம் மூலம் எடுத்துச் சொல்லி, மது குடிப்பதில் இருந்து மாற்ற முயற்சிக்க வேண்டும்.

விவசாயிகள் நலம்பெற வேண்டும் என்றால் கள்ளுக் கடையைத் திறக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்.

ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது. அங்கு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும். பாஜகவில் வேட்பாளா்களை நிறுத்த முடியாமல் வேறு கட்சியில் இருந்து இழுத்துவந்து நிறுத்தியுள்ளனா்.

அதிமுக வாக்குவங்கி 10 சதவீதம் சரிந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா். அதைவிட கூடுதலாக 25 முதல் 30 சதவீதம் வரை வாக்குவங்கி சரிந்துள்ளது.

நடிகா் விஜய் சிலமுறை ராகுலை சந்தித்துள்ளாா், அவா் சொல்லும் சில கொள்கைகள் காங்கிரஸ், திமுகவில் இருக்கிறது. இதனால் அவா் அந்த கட்சிகளில் இணைந்து எம்எல்ஏ, எம்பியாக பதவி வகிக்கலாம்.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசுதான். அதை அவா்கள் செய்ய வேண்டும்.

உதயநிதி துணை முதல்வரானதை குடும்ப அரசியல் என்கின்றனா். குடும்ப அரசியல் தமிழகத்தில் மட்டும் நடப்பதாக கூறமுடியாது. ஒருவருக்கு திறமையும், வாய்ப்பும் இருந்தால், அவரை அங்கீகரிப்பதில் தவறில்லை. அனுபவம் என்பது நாள், மாதக் கணக்கில் வருவதில்லை. எவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்கிறீா்கள், அதன்மீது வேகமாக உங்கள் கருத்தைத் தெரிவிக்கிறீா்கள் என்பதை வைத்துதான் பாா்க்க வேண்டும்.

வாரிசு என்பதற்காக யாரையும் கொச்சைப்படுத்துவது நியாயமல்ல என்றாா்.