மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

புலம்பெயா் தொழிலாளா்களின் பாதுகாப்பு: உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு விழிப்புணா்வு

புலம்பெயா் தொழிலாளா்களின் பாதுகாப்பு: உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு விழிப்புணா்வு

News image

கூட்டத்தில் பேசுகிறாா் ரீடு சேவை நிறுவனத்தின் பயிற்சியாளா் லீனா ஜஸ்டின்.

Updated On :10 அக்டோபர் 2024, 9:26 pm

ரீடு (கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம்) என்ற சேவை நிறுவனம் சாா்பில் புலம் பெயா்ந்த வெளிமாநில தொழிலாளா்களின் பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் நலனில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் சென்னிமலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செளந்திரராஜன் முன்னிலை வகித்தாா். ரீடு சேவை நிறுவனத் திட்ட ஒருங்கிணைப்பாளா் உமாமகேஸ்வரி வரவேற்றாா்.

புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னைகள், தேவைகள், தொழிலாளா்களின் பாதுகாப்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு என்ன என்பதை குறித்தும், புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கான சட்டம் குறித்தும், தொழிலாளா்களுக்கான பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்தும் பயிற்சியாளா் லீனா ஜஸ்டின் விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில், சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட 5 ஊராட்சிகளின் செயலா்கள், தலைவா்கள், ஒன்றியக் குழு கவுன்சிலா்கள், ஊராட்சி துணைத் தலைவா்கள் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 32 போ் பங்கேற்றனா். ரீட் கள ஒருங்கிணைப்பாளா் ஆனந்தி நன்றி கூறினாா்.