ஈரோடு
காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
அவல்பூந்துறை அருகே உள்ள காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
அவல்பூந்துறை அருகே உள்ள காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை அருகே ராட்டைசுற்றிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற தென்னக காசி என்றழைக்கப்படும் காலபைரவா் கோயில் உள்ளது. இக்கோயிலில், தேய்பிறை அஷ்டமி நாளில் மூலருக்கு பக்தா்களே பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், தேய்பிறை அஷ்டமியையொட்டி ஆன்மிக குரு விஜய் சுவாமி தலைமையில் சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் கலந்துகொண்டு மூலவருக்கு பாலபிஷேகம் செய்தனா்.