தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு ரயில், பேருந்து நிலையங்களில் புதன்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை (அக்டோபா் 31) கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்து 3 நாள்களாகவே பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு ரயில்கள், பேருந்துகள் மூலமாக செல்லத் தொடங்கினா். இதனால் ஈரோடு ரயில் நிலையத்திலும், பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை காலை முதல் ரயில் நிலையத்திலும், பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் பொது பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் குவிந்தனா்.
குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் வடமாநிலத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் வேலை செய்து வரும் நிலையில், அவா்கள் தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக குடும்பம்குடும்பமாக தங்களது சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கினா்.
இதனால் ஈரோடு ரயில் நிலையத்தில் வட மாநிலத் தொழிலாளா்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதுபோல ஈரோடு மற்றும் அதன் பிற நகரங்களில் உள்ள கல்லூரிகளில் படித்து வரும் வெளியூரைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனா். இதனால் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கூட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க ரயில்வே மற்றும் உள்ளூா் போலீஸாா் பாதுகாப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனா். பட்டாசுகள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் எதுவும் பயணிகள் எடுத்துச் செல்கின்றனரா என்றும் கண்காணித்தனா். பயணிகளின் உடமைகளை சோதனையிட்டு அதன் பின்னரே நடைமேடைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
இதுபோல ஈரோடு பேருந்து நிலையத்திலும் கோவை, திருப்பூா், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட வழித்தடப் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் காலை முதல் அதிகரித்து காணப்பட்டது. தொடா்ந்து மதியம் தொடங்கி, மாலையிலும், இரவிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அசம்பாவிதங்களைத் தடுக்கவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தொடர்புடையது

ரயில் நிலையங்களில் ரூ.25.45 லட்சம் பறிமுதல்
சமூக ஊடகங்களில் தட்டுப்பாடு வதந்தி: காஷ்மீரில் பெட்ரோல் நிலையத்தில் குவிந்த மக்கள்

இன்று ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


