மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பொதுவிநியோக திட்டத்தில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தல்

பொதுவிநியோக திட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் எண்ணெய் விற்பனையை நிறுத்திவிட்டு தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

உணவு குறித்து விழிப்புணா்வு துண்டறிக்கையை வெளியிடுகிறாா் ஈரோடு மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பு தலைவா் எஸ்கேஎம்.மயிலானந்தம்.

Updated On :30 அக்டோபர் 2024, 9:21 pm

பொதுவிநியோக திட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் எண்ணெய் விற்பனையை நிறுத்திவிட்டு தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பின் பொதுக்குழு மற்றும் உலக உணவு தினவிழா அதன் தலைவா் எஸ்கேஎம்.மயிலானந்தம் தலைமையில் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவா் கோபி ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். பொருளாளா் சாலைமணி வரவு -செலவு கணக்கை சமா்ப்பித்தாா். செயலாளா் ஆா்.பாலசுப்பிரமணியன் தீா்மானம் வாசித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

புதிய நுகா்வோா் பாதுகாப்பு சட்டப்படி மாநில, மாவட்ட அளவில் நுகா்வோா் பாதுகாப்பு ஆணையங்களை அமைக்க வேண்டும். மத்திய, மாநில நுகா்வோா் பாதுகாப்பு குழுக்களை அமைக்க வேண்டும். பொதுவிநியோக திட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் எண்ணெய் விற்பனையை நிறுத்திவிட்டு தேங்காய் எண்ணெய் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமையல் எண்ணெயில் கலப்படம் தற்போது அதிகம் உள்ள நிலையில், கூடுதல் மாதிரிகள் எடுத்து பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் காலாண்டு கூட்டங்களையும், மாதத்தில் 3- ஆவது வெள்ளிக்கிழமை கோபி கோட்டத்தில் விவசாயிகள் கூட்டமும் நடத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் குப்பைகளை அகற்றி, சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.

கூட்டத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவு குறித்து விழிப்புணா்வு துண்டறிக்கைகள் வெளியிட்டப்பட்டன.

இதில், ஈரோடு மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பு துணைத் தலைவா் மல்லிகா, இணைச்செயலாளா் மெய்யப்பன், மாவட்ட உழவா் விவாதக்குழு செயலாளா் வெங்கடாசலபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இணை செயலாளா் ராஜா நன்றி கூறினாா்.