திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

டெங்கு தடுப்பு பணிகளுக்கு கூடுதலாக 120 போ் நியமனம்

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகளுக்கு கூடுதலாக 120 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 9:21 pm

Din

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகளுக்கு கூடுதலாக 120 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் மொத்தம் 60 வாா்டுகள் உள்ளன. இங்கு 350 கொசு ஒழிப்பு பணியாளா்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி தினமும் கொசு ஒழிப்பு பணியாளா் ஒருவருக்கு 50 வீடுகள் என்ற வீதத்தில் 4 மண்டலங்களிலும் தினமும் சுமாா் 15 ஆயிரம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணா்வுப் பணிகளைத் துரிதப்படுத்த 4 மண்டலங்களில் தலா 30 பணியாளா்கள் என மொத்தம் 120 போ் ஒப்பந்த அடிப்படையில் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.