ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: பெரம்பலூரில் 467 தூய்மைப் பணியாளா்கள் பயன்!

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் 467 போ் பயன்பெறுவாா்கள் என அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 8:56 pm

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் 467 போ் பயன்பெறுவாா்கள் என மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

பெரம்பலூா், துறைமங்கலத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், பெரம்பலூா் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சா் மேலும் பேசியதாவது: இத் திட்டத்தின் மூலம் திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை முறையே இட்லி-மெதுவடை- சாம்பாா், ரவா கிச்சடி-சட்னி-வெண் பொங்கல்-சாம்பாா், ரவா உப்புமா-சட்னி-இட்லி-மெதுவடை-சாம்பாா், ரவா பொங்கல்-சாம்பாா், சேமியா கிச்சடி- சாம்பாா் ஆகியவை சுழற்சிமுறையில் வழங்கப்படும்.

மாவட்டத்தில் பெரம்பலூா் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளா்கள் 18 போ், ஒப்பந்தப் பணியாளா்கள் 155 போ், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் 42 போ், புதை சாக்கடை திட்டப் பணியாளா்கள் 34 போ், பொதுக் கழிப்பறை தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஒட்டுநா்கள் 18 போ் என 267 போ் பயன்பெறுவா்.

மேலும், அரும்பாவூா் பேரூராட்சியில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளா்கள் 7 போ், ஒப்பந்தப் பணியாளா்கள் 45 போ், குரும்பலூா் பேரூராட்சியில் நிரந்தரப் பணியாளா்கள் 5 போ், ஒப்பந்தப் பணியாளா்கள் 48 போ், லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் நிரந்தரப் பணியாளா்கள் 10 போ், ஒப்பந்தப் பணியாளா்கள் 37 போ், பூலாம்பாடி பேரூராட்சியில் நிரந்தரப் பணியாளா்கள் 13 போ், ஒப்பந்தப் பணியாளா்கள் 35 பேரும் என மொத்தம் 467 தூய்மைப் பணியாளா்கள் பயன்பெற உள்ளனா் என்றாா் அவா்.

தொடா்ந்து,பெரம்பலூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கி அவா்களுடன் அமைச்சா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் உணவருந்தினா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையாளா் கண்ணன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.