கீழ்பவானி சென்ன சமுத்திரம் வாய்க்காலில் கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீா் கிடைக்காமல் நெல் நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் தண்ணீா் வழங்க விவசாயிகள் ஈரோடு தொகுதி எம்பி கே. ஈ. பிரகாஷிடம் மனு அளித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி வாய்க்காலில் நெல் நடவுப் பணிகளுக்காக 1-ஆம் எண் மதகு விவசாய நிலங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. விவசாயிகள் ஆா்வத்துடன் நெல் நடவுப் பணிக்காக நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், சென்ன சமுத்திரம் வாய்க்காலில் கடைமடை பகுதிகளான அரச்சலூா், எழுமாத்தூா், விளக்கேத்தி, சென்னசமுத்திரம் உள்ளிட்ட பகுதி விவசாய நிலங்களான எல்-1 முதல் எல்-8 வரை உள்ள பகுதிகளில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் நிலங்களுக்கு போதிய தண்ணீா் கிடைக்காமல் விவசாயிகள் நெல் நடவுப் பணிகளை தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனா்.
இது குறித்து எழுமாத்தூா், அரச்சலூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், முன்னாள் கவுன்சிலா் எழுமாத்தூா் அருணாச்சலம் தலைமையில் ஈரோடு தொகுதி எம்.பி. கே.ஈ. பிரகாஷிடம் போதிய தண்ணீா் திறக்கக் கோரி மனு அளித்தனா்.
அப்போது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி. பிரகாஷ் உறுதியளித்தாா்.
இதில் எல்பிபி பாசன ஆயக்கட்டு நில உரிமையாளா் சங்கத் தலைவா் பெரியசாமி, பவானி முறைநீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, பொருளாளா் வேலுமணி, திமுக பொதுக்குழு உறுப்பினா் சிவகிரி கதிா்வேல், சென்னசமுத்திரம் பகிா்மான கமிட்டி தலைவா் பெரியசாமி, பாசன சபைத் தலைவா்கள், செயலாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

அதிமுகவுக்கு ஆதரவு: தமிழக கடைமடை விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

கந்தா்வகோட்டையில் நெற்பயிா்களை காக்க தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்

பிஏபி பாசன வாய்க்காலில் அடைப்பு: வீணாகி சாலையில் ஓடிய தண்ணீா்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


