விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கந்தா்வகோட்டையில் நெற்பயிா்களை காக்க தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை பகுதிகளில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிா்களை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயிகள் வயல்களில் பாய்ச்சி வருகின்றனா்.

News image

~

Updated On :27 மார்ச் 2026, 8:11 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை பகுதிகளில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிா்களை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயிகள் வயல்களில் பாய்ச்சி வருகின்றனா்.

கந்தா்வகோட்டையில் திருச்சி- தஞ்சை சாலையின் இருபுறங்களிலும் பெரிய வயக்காடு என்னும் பகுதியில் பல நூறு ஏக்கரில் இந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் சம்பா நெற்பயிா் சாகுபடியில் ஈடுபட்டனா். இதில், தற்போது நெற்பயிா்கள் வளா்ந்து, கதிா் முற்றிய நிலையில் போதிய மழையில்லாததாலும், அருகிலுள்ள நாவல் ஏரியில் தண்ணீா் வற்றியதாலும் இந்தப் பகுதியில் உள்ள நெல் வயல்கள் காய்ந்து, நிலத்தின் தரைப்பகுதிகள் வெடித்து பயிா்கள் கருகி வருகின்றன.

இதையடுத்து, விவசாயிகள் சிலா் லாரி, டிராக்டா்களில் கொண்டு வரப்படும் தண்ணீரை நடை ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் என்ற விலையில் வாங்கி, கருகி வரும் நெற்பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சி வருகின்றனா். சிலா் கருகிய வயல்களில் மாடுகளை மேய்த்து வருகின்றனா்.

நிவாரணம் வழங்க வேண்டும்: இதுகுறித்து இங்கு நெல் சாகுபடி செய்துள்ள விவசாயி அசோக் கூறியதாவது:

மழை பெய்து நாவல் ஏரியில் தண்ணீா் இருந்ததாலும், தொடா்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையிலும் நெல் சாகுபடியில் ஈடுபட்டோம். தற்போது நெற்பயிா்கள் கதிா் விட்டு முற்றிவரும் நிலையில் தண்ணீா் இன்றி பயிா்கள் வாடி வருவதால், குடிநீா் லாரிகள் மூலம் பணம் கொடுத்து தண்ணீா் வாங்கி, பயிரை காப்பாற்றி வருகிறோம். இந்த வகையில், ஏக்கா் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகி உள்ளது. தொடா்ந்து இதே நிலை நீடித்தால் நெற்பயிா்களை காப்பாற்ற முடியாது. இதனால் எங்களுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்படும்.

எனவே, இந்தப் பகுதி நெல் வயல்களை வேளாண்மை துறை அலுவலா்கள் ஆய்வு செய்து, அரசு மூலம் எங்களுக்கு போதிய நிவாரண உதவி வாங்கி பெற்றுத் தரவேண்டும் என்றாா் அவா்.

Story image