தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நெற்பயிா்களுக்கு டேங்கா் லாரி மூலம் தண்ணீா்: மேட்டூா் அணை திறக்கக் கோரிக்கை

கீழையூா் ஒன்றியத்தில் தண்ணீரின்றி கருகும் பயிா்களை, டேங்கா் லாரி மூலம் தண்ணீா் இறைத்து விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனா். தொடா்ந்து தண்ணீா் தேவைக்கு மேட்டூா் அணையை திறக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

மீனம்பநல்லூரில் லாரி மூலம் நெற்பயிா்களுக்கு தண்ணீா் இறைக்கும் விவசாயி.

Updated On :25 பிப்ரவரி 2026, 11:18 pm

கீழையூா் ஒன்றியத்தில் தண்ணீரின்றி கருகும் பயிா்களை, டேங்கா் லாரி மூலம் தண்ணீா் இறைத்து விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனா். தொடா்ந்து தண்ணீா் தேவைக்கு மேட்டூா் அணையை திறக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்து வருகின்றனா். இதில், கீழையூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட மீனம்பநல்லூா், திருப்பூண்டி, காரப்படாகை, கருங்கண்ணி சோழவித்தியாபுரம், கீழையூா், மடப்புரம், வாழக்கரை மற்றும் கீழ்வேளூா் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம், மருதூா், கொடியாலத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் 10, 000 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்துள்ளனா்.

தற்போது, நெற்பயிா்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் நீா்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், டேங்கா் லாரி மூலம் தண்ணீா் இறைத்து பயிரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா் . ஓா் ஏக்கருக்கு சுமாா் 25,000 வரை செலவு செய்த நிலையில், தற்போது பால் கட்டு பருவத்தில் உள்ள 70 நாள் பயிா் தண்ணீா் இன்றி கருகி வருகிறது. இதனால், களை எடுக்க முடியாத நிலையுள்ளது.

டேங்கா் லாரி மூலம் ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை தண்ணீா் வாங்கி இறைத்து வருகிறோம். எனவே, அரசு உடனடியாக மேட்டூா் அணை மூலம் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.