மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

பெருந்துறையில் ரூ. 3.07 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.3 கோடியே, 7 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :25 செப்டம்பர் 2024, 10:04 pm

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.3 கோடியே, 7 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 5,402 மூட்டைகளில் இரண்டு லட்சத்து, 56 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.124-க்கும், அதிகபட்சமாக ரூ.143.85-க்கும் விற்பனையானது.

இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 68.68-க்கும், அதிகபட்சமாக ரூ.130-க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ.3 கோடியே, 7 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.