ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பரமத்தி வேலூரில் ரூ. 4.96 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்!

பரமத்தி வேலூா் பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 4 லட்சத்து 96 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

News image

கொப்பரை.

Updated On :26 பிப்ரவரி 2026, 8:11 pm

பரமத்தி வேலூா் பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 4 லட்சத்து 96 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளான சோழசிராமணி, ஜேடா்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகா், பாண்டமங்கலம், கபிலா்மலை, இருக்கூா், பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமைதோறும் வெங்கமேட்டில் உள்ள பொத்தனூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா்.

இங்கு தரத்திற்கு தகுந்தாா்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது. கொப்பரையை ஏலம் எடுப்பதற்கு வெள்ளக்கோவில், சிவகிரி, அவல் பூந்துறை, முத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா். கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 9 ஆயிரத்து 459 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.174.09 க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 160.10க்கும், சராசரியாக கிலோ ரூ. 170.10க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 158.99க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 133.69 க்கும், சராசரியாக கிலோ ரூ. 156.79க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 9 லட்சத்து 59 ஆயிரத்து 809 க்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

இந்த நிலையில் பிப். 26 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 345 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 167.90 க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 155.10க்கும், சராசரியாக கிலோ ரூ.165க்கும் ஏலம் போனது.

இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 151.35க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 130.10 க்கும், சராசரியாக கிலோ ரூ.148.99க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 4 லட்சத்து 96 ஆயிரத்து 520 க்கு கொப்பரை ஏலம் போனது. கொப்பரை விலை தொடா்ந்து சரிவடைந்து வருவதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.