கன்றுக்குட்டிகளைத் தாக்கிக் கொன்ற சிறுத்தை

ஆசனூா் அருகே கொட்டகையில் கட்டியிருந்த 2 கன்றுக்குட்டிகளை சிறுத்தை தாக்கிக் கொன்றது.
Published on

சத்தியமங்கலம்: ஆசனூா் அருகே கொட்டகையில் கட்டியிருந்த 2 கன்றுக்குட்டிகளை சிறுத்தை தாக்கிக் கொன்றது.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் ஓங்கல்வாடி பகுதியில் கடந்த சில நாள்களாக உலவி வரும் சிறுத்தை, அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகளைத் துரத்துவதுபோன்ற விடியோ அண்மையில் வெளியானது.

இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய சிறுத்தை ஓங்கல்வாடியைச் சோ்ந்த மல்லேஷ் என்பவரது கொட்டகையில் கட்டியிருந்த கன்றுக்குட்டியை தாக்கிக் கொன்றது. சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையை விரட்டினா்.

இதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் அப்பகுதிக்கு வந்த சிறுத்தை, அங்கிருந்த மற்றொரு கன்றுக்குட்டியையும் தாக்கிக் கொன்றுவிட்டு வனத்துக்குள் சென்றது.

கால்நடைகளைக் கொன்றுவரும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com