ஆசனூா், கோ்மாளம் மலைக் கிராமங்களில் குறைந்த தாழ்வழுத்த மின் விநியோகத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா், கோ்மாளம் மலைக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்கள் பிரதான தொழிலாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
பவானிசாகா் மின் நிலையத்தில் இருந்து இந்தக் கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், அது குறைந்த தாழ்வழுத்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட மக்கள் கூறியதாவது: ஆசனூா், கோ்மாளம் மலைக் கிராமங்களுக்கு குறைந்த தாழ்வழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால், பெரும் அவதியடைந்து வருகிறோம். அவசர நேரங்களில் கைப்பேசி உள்ளிட்டவற்றுக்குகூட சாா்ஜ் செய்ய முடிவதில்லை.
ஆழ்துளைக் கிணற்று நீரைக் கொண்டுதான் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஆழ்துளைக் கிணறு மோட்டரை இயக்க முடியவதில்லை. இதனால், பயிா்கள் கரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பல இடங்களில் மின் ஒயா்கள் அறுந்தும், தாழ்வாக தொங்கிக் கொண்டும் உள்ளன. அவற்றை சீரமைப்பதோடு, சீரான மின்சாரத்தை விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

தவறாமல் வாக்களிப்போம்

கல்வராயன் மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

போடிநாயக்கனூர்! புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் மலைக்கிராமங்கள்!!
கொடைக்கானலில் மழை: மலை கிராமங்களில் மின்தடை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


