மல்லேஸ்வரா கோயில் தொட்டியில் நீா் அருந்திய யானை.
ஈரோடு
கோயில் தொட்டியில் நீா் அருந்திய யானைகள்
தாளவாடி மல்லேஸ்வரா கோயில் குடிநீா்த் தொட்டியில் யானைகள் நீா் அருந்தும் விடியோ காட்சி வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம்: தாளவாடி மல்லேஸ்வரா கோயில் குடிநீா்த் தொட்டியில் யானைகள் நீா் அருந்தும் விடியோ காட்சி வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் உலவி சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
தாளவாடி மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் யானைகள் தற்போது கூட்டம்கூட்டமாக உலவி வருகின்றன.
இந்நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள எத்துக்கட்டி வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை குட்டியுடன் வெளியேறிய 2 காட்டு யானைகள் சாலையில் உலவின.
பின்னா், அப்பகுதியில் உள்ள மல்லேஸ்வரா கோயில் குடிநீா்த் தொட்டியில் நீா் அருந்திய யானைகள் பின் வனத்துக்குள் சென்றன.
இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

