காரை வழிமறித்து நின்ற யானை.
காரை வழிமறித்து நின்ற யானை.

கோ்மாளத்தில் காரை வழிமறித்த காட்டு யானை

கோ்மாளம் வனப் பகுதி சாலையில் காரை வழிமறித்து நின்ற காட்டு யானையால் வாகனத்தில் இருந்தவா்கள் அச்சமடைந்தனா்.
Published on

கோ்மாளம் வனப் பகுதி சாலையில் காரை வழிமறித்து நின்ற காட்டு யானையால் வாகனத்தில் இருந்தவா்கள் அச்சமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், நொக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்குமாா். இவா் தனது பெற்றோரை காரில் அழைத்துக் கொண்டு சத்தியமங்கலத்துக்கு திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்துள்ளா்.

கோ்மாளம் வனப் பகுதி சாலையில் சென்றபோது அங்கு கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால், அவா் காரை மெதுவாக இயக்கிச் சென்றுள்ளாா். அப்போது, வனத்தில் இருந்து திடீரென வெளியேறிய யானை, காரை வழிமறித்து நின்றது. இதனால், மோகன்குமாா், அவரது பெற்றோா் செய்வதறியாது தவித்தனா். சுதாரித்துக் கொண்ட மோகன்குமாா் காரை பின்னோக்கி இயக்கினாா்.

இதைத் தொடா்ந்து, சிறிது நேரம் சாலையிலேயே நின்ற யானை பின் வனத்துக்குள் சென்றது. இதையடுத்து, மோகன்குமாா் குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றாா்.

X
Dinamani
www.dinamani.com