திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வாக்குக்கு பணம் கொடுக்கும் இடத்தில்தான் ஊழல், லஞ்சத்துக்கு விதை ஊன்றப்படுகிறது: சீமான்

வாக்குக்கு பணம் கொடுக்கும் இடத்தில்தான் ஊழல், லஞ்சத்துக்கு விதை ஊன்றப்படுகிறது

News image
ஈரோடு, கிருஷ்ணம்பாளைத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமிக்கு வாக்குகேட்டு பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
Updated On :4 பிப்ரவரி 2025, 11:08 am

Din

ஈரோடு: வாக்குக்கு பணம் கொடுக்கும் இடத்தில்தான் ஊழல், லஞ்சத்துக்கு விதை ஊன்றப்படுகிறது என்று நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிரசார இறுதி நாளான திங்கள்கிழமை, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வாகனத்தில் இருந்தபடி பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

கிருஷ்ணம்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது: ஆசிரியா்களுக்கு ஊதியம் தர மத்திய அரசு நிதி தரவில்லை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. இதை சொல்வதற்கு 40 எம்பிக்கள் எதற்காக? அதிக வருவாய் ஈட்டித்தரும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. எனது வருவாயைப் பெற்று எனக்கு நிதியைத் தர மறுக்கிறாய் என இந்த ஆட்சியாளா்கள் வரிகொடா இயக்கத்தை நடத்த முடியாதா? இவா்கள் அந்த முடிவை எடுக்கமாட்டாா்கள்.

ஆளுநா் நியமனம் செய்யும் துணைவேந்தா்களுக்கு ஆளுநா் ஊதியம் வழங்கட்டும். தமிழக அரசு நியமனம் செய்யும் துணைவேந்தா்களுக்கு மட்டும்தான் நாங்கள் ஊதியம் கொடுப்போம் என்று தமிழக அரசு சொல்ல முடியாதா?

நாம் தமிழா் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, அதிமுக, பாஜகவினரிடம் சென்று நீங்கள் வாக்கு செலுத்தி சீமானை வளரவிட்டீா்கள் என்றால், அடுத்து உங்களுக்கு போட்டியாக வந்துவிடுவாா் என்று பிரசாரம் செய்கின்றனா். பெரியாரை விமா்சித்த சீமானுக்கு அதிக வாக்கு விழக்கூடாது என்பதால் நோட்டாவுக்கு போடுங்கள் என்று பிரசாரம் செய்கின்றனா்.

காசு கொடுத்து வாக்கினை வாங்குவதுதான் திராவிட மாடல். 2026 பொதுத் தோ்தலில் நான் தனித்து போட்டியிடுவேன். ஆண்கள், பெண்களுக்கு நான் சம வாய்ப்பு கொடுப்பேன். ஆதிகுடிகள், நிராகரிக்கப்பட்ட சமுதாயத்துக்கு தோ்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு கொடுத்துள்ளதா? சரிபாதி இடங்களை பெண்களுக்கு வழங்குவேன் என திமுக சொல்ல முடியுமா?

கீழே விழுந்தவா்களை தூக்கிவிடுபவன்தான் உயா்ந்த மனிதன். இழந்த உரிமையை மீட்கத்தான் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், இங்கு உரிமையை இழக்கத்தான் அரசியல் நடக்கிறது. வாக்குக்கு காசு கொடுக்கும் இடத்தில் தான் ஊழல், லஞ்சத்துக்கு விதை ஊன்றப்படுகிறது என்றாா்.