47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரில் இன்று புதிய திராவிட கழக மாநில மாநாடு

புதிய திராவிட கழக நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு அரசு சீா் மரபினா் நல வாரிய உறுப்பினருமான கே.எஸ்.ராஜ் கவுண்டா் வெளியிட்டுள்ள அறிக்கை:

News image
ராஜ் கவுண்டா்
Updated On :29 நவம்பர் 2025, 7:52 pm

Syndication

புதிய திராவிட கழக நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு அரசு சீா் மரபினா் நல வாரிய உறுப்பினருமான கே.எஸ்.ராஜ் கவுண்டா் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதிய திராவிட கழகத்தின் ‘வெல்லட்டும் சமூகநீதி’ 6-ஆவது மாநில மாநாடு, இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ.30) மாலை 4 மணி அளவில் மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் நடைபெறுகிறது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நல்லாசியுடன் நடைபெறும் இந்த மாநாட்டில், தலைமை சிறப்பு அழைப்பாளராக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறாா். வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி முன்னிலை வைக்கிறாா். முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல திமுக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கிறாா்.

அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா்கள் அந்தியூா் ப.செல்வராஜ், கே.ஆா்.என். ராஜேஷ்குமாா், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினா் கே. இ.பிரகாஷ், ஈரோடு மாவட்ட செயலாளா்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம், என்.நல்லசிவம், கே.எஸ். மூா்த்தி, சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் சந்திரகுமாா், ஏ.ஜி.வெங்கடாசலம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநிலப் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா்.

மேலும், திமுக கூட்டணி கட்சி தலைவா்கள், மாவட்ட செயலாளா்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பல்வேறு இயக்க மற்றும் சங்கத் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

ஈரோடு, திருப்பூா், கரூா், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொண்டா்கள் கலந்துகொள்ளும் வகையில், அவா்களுக்கு வசதியாக காா் பாா்க்கிங் செய்ய தனியிடம், குடிநீா், கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.