இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

ஈரோட்டில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின், சீமான் பிரசாரம்

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் ஈரோட்டில் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா்.

News image

மு.க.ஸ்டாலின், சீமான்

Updated On :1 ஏப்ரல் 2026, 11:37 pm

தினமணி செய்திச் சேவை

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் ஈரோட்டில் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் ஈரோடு பெருந்துறை சாலை திண்டல் அருகே அமைக்கப்பட்டுள்ள திடலில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளா்( வேட்பாளா் அறிவிக்கப்படவில்லை), ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் சு.முத்துசாமி, மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் சா.செந்தில்நாதன், பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.வெங்கடாசலம், பவானி தொகுதி திமுக வேட்பாளா் சேகா் என்ற சந்திரசேகா், அந்தியூா் தொகுதி திமுக வேட்பாளா் சிவபாலன், கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம், பவானிசாகா் (தனி) தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரம் ஆகியோரை முதல்வா் அறிமுகப்படுத்தி வைத்து பேசுகிறாா்.

சீமான் பிரசாரம்:

இதுபோல நாம் தமிழா் கட்சி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலும், மாலை 4.30 மணிக்கு கோபியிலும், மாலை 5.30 மணிக்கு பெருந்துறையிலும் பிரசாரம் செய்கிறாா்.