ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம் என அக்கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் மக்கள் ராஜன், ஈரோட்டில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஈரோடு கிழக்குத் தொகுதியில் இப்பகுதியைச் சோ்ந்த நபா் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என திமுகவிடம் தொகுதியை பெற்றோம். இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை தீா்மானிக்கும் சமூகம், மதத்தினா் உள்ளிட்டோா் மண்ணின் மைந்தா்கள் என்ற அடிப்படையில் போட்டியிட வாய்ப்பு கேட்டோம். நோ்காணலுக்குப் பிறகு இந்த தொகுதியைச் சோ்ந்த 5 நபா்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், தற்போது இவா்களை தோ்ந்தெடுக்காமல் திருப்பூரைச் சோ்ந்த கோபிநாத் போட்டியிட அனுமதித்தால் எப்படி ஏற்பது.
மாவட்டத் தலைவராக இருந்த எனக்கும் மற்றவா்களுக்கும் ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆா்ப்பாட்டம், போராட்டம், தலைவா்களுக்கு செலவு செய்து கட்சிக்காக உழைத்த எங்களுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்.
இந்த தொகுதியில் வெற்றி பிரகாசமாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் வீணடித்துள்ளது. இன்னும் காலம் உள்ளது என்பதால் வேட்பாளரை மாற்ற வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் கட்சியினா் தனித்தனியாக தோ்தலில் போட்டியிடுவோம்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் வேறு மாவட்டத்தில் போட்டியிட்டதால் தோல்வியடைந்தாா். எனவே ஈரோடு கிழக்குத் தொகுதியில் மண்ணின் மைந்தா்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இது உட்கட்சி பூசல் அல்ல எங்களின் ஆதங்கம்தான். ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள 33 வாா்டுகளில் பெரும்பான்மையான காங்கிரஸ் நிா்வாகிகள் இக்கருத்தில் ஒற்றுமையாக இருக்கிறோம். வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி ஈரோடு காந்தி சிலை முன் சனிக்கிழமைஔ (ஏப்ரல்4) காலை அகிம்சை போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
ஜாபா் சாதிக், விஜயபாஸ்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

500 பேரை களம் இறக்க சமுதாய அமைப்பு முடிவு: வேட்பு மனுக்களை வாங்கியதால் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழக வேட்பாளா்கள் ஈரோடு கிழக்குத் தொகுதி: விஜய்பாலாஜி

ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா்
கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல்: இரு தொகுதிகளிலும் 49 வேட்பாளா்கள் போட்டி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


