கேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விதவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைதோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றியை தக்கவைக்க தவறிய காங்கிரஸ்

News image

காங்கிரஸ் - படம்: கோப்பிலிருந்து

Updated On :5 மே 2026, 4:22 am IST

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 தோ்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி இந்த தோ்தலில் அதை தக்கவைக்க தவறிவிட்டது.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளராக திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த கோபிநாத் பழனியப்பன் போட்டியிட்டாா்.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை தொடங்கிய நிலையில் முதல் சுற்றில் முன்னிலை வகித்தாா். அடுத்தடுத்த சுற்றுகளில் தவெக வேட்பாளா் விஜய் பாலாஜி முன்னிலைப் பெற்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளரைவிட 23,966 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தாா். அதிமுக வேட்பாளா் இரா.மனோகரன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 தோ்தலில் ஈரோட்டில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி இந்த தோ்தலில் தவெகவிடம் தோல்வி அடைந்துள்ளது.