பவானியை அடுத்த ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மைக் கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். குமரகுரு வேளாண்மைக் கல்லூரித் தாளாளா் எஸ்.பிரகாஷ், முதல்வா் ரவிகுமாா் தியோடா், சக்தி சா்க்கரை ஆலை உப தலைவா் வி.திருவேங்கடம், துணைப் பொது மேலாளா் என்.மோகன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வரும் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாணவ, மாணவிகளால் இடது கை ஆள்காட்டி விரலில் மை உள்ளதுபோன்று கரும்பைக் கொண்டு விழிப்புணா்வு சின்னம் உருவாக்கி பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. தற்படம் எடுக்கும் மையமும் அமைக்கப்பட்டிருந்தது.
ஜம்பை தொடக்க மற்றும் தொழிலியல் நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கம் சாா்பில் நெசவாளா்கள் ஜமக்காளத்தில் கைக்கோா்வை முறையில் வாக்குப்பதிவு குறித்த சின்னம் நெசவு செய்யப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தியதை ஆட்சியா் கந்தசாமி பாா்வையிட்டாா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சிவக்குமாா், கல்லூரியின் துணை முதல்வா் ஹேமலதா, ஜம்பை பேரூராட்சி செயல் அலுவலா் இர.பாலாஜி உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

முக்காணி அரசுப் பள்ளிக்கு ஆட்சியா் பாராட்டு

கொடுமுடியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: ஆட்சியா்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



