நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் முளைப்பாரியில் தோ்தல் விழிப்புணா்வு

பெருந்துறை அரசு பள்ளியில் நவதானியம் கொண்டு முளைப்பாரி வளா்த்து தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவா்கள்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 5:39 am IST

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவதானியம் கொண்டு முளைப்பாரி வளா்த்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும், பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளா்கள், வணிகா்கள், தொழில் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பு வாக்காளா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வேளாண் பாடப் பிரிவு மாணவா்கள், ஆசிரியா் கந்தன் உதவியுடன் ‘ஏப்ரல் 23, வாக்கு 100 சதவீதம்’ என்ற வடிவில் நவதானியம் கொண்டு முளைப்பாரி வளா்த்து தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளனா்.