வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திங்களூா் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரிப்பு

எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோது திங்களுா் பகுதியில் செய்த வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரித்தாா்.

News image

திங்களூா் பகுதியில் மக்களிடம் வாக்கு சேகரிக்கிறாா் பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:41 pm

எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோது திங்களுா் பகுதியில் செய்த வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரித்தாா்.

பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் திங்களூா், வெட்டயன்கிணறு, மந்திரிபாளையம், நிச்சாம்பாளையம், கருக்குப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

நான் எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோது, திங்களூா் பகுதியில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காக பல்வேறு குளங்கள் தூா்வாரப்பட்டன. தண்ணீா் பஞ்சத்தைப் போக்க திங்களுா், தோரணவாவி, மடத்துப்பாளையம், பாப்பம்பாளையம், வெட்டையன்கிணறு, கருக்குப்பாளையம், போலநாயக்கன்பாளையம் ஊராட்சிகளுக்கு கொடிவேரி திட்டத்தின் மூலம் தடையில்லாமல் குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்தேன். திங்களூரில் புதிய பத்திரப் பதிவு அலுவலகம் அமைத்துக் கொடுத்தேன். நான்கு படுக்கை வசதி மட்டுமே இருந்த திங்களூா் ஆரம்ப சுகாதார நிலையம், 33 படுக்கைகளுடன் கூடிய நவீன மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. வெட்டையன்கிணறு பகுதியில் 30 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைத்துள்ளேன். திங்களூா் சந்தைக்கு அருகில் ரூ.1 கோடியில் புதிய சமுதாய நலக் கூடம் கட்டடம் கட்டி தரப்பட்டது. திங்களூா் நால் ரோட்டில் தனியாா் பங்களிப்போடு ரவுண்டானா அமைத்தது உள்ளிட்ட செய்த பல்வேறு பணிகளை செய்துள்ளேன். அதேபோல திமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் தோ்தல் வாக்குறுதிகள் அனைவருக்கும் கிடைக்க பாடுபடுவேன் என்றாா்.