அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

News image

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட தொட்டம்பட்டியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:51 am IST

திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கேட்டுக்கொண்டாா்.

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி சென்னிமலை ஒன்றியத்துக்குள்பட்ட பனியம்பள்ளி, வாய்ப்பாடு, சிறுகளஞ்சி, தொட்டம்பட்டி, பள்ளக்காட்டுபுதூா், எம்.பி.என்.காலனி, தோப்புபாளையம், வாய்ப்பாடிபுதூா், எளையம்பாளையம், சுள்ளிமேடு, காளிபாளையம், ஆலம்பாளையம், கூத்தம்பாளையம், தொட்டியவலசு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியாதவது:

2011 முதல் 2021 வரை பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும், அமைச்சராக இருந்தபோதும் பெருந்துறை சிப்காட் பகுதியில் தேங்கிக் கிடந்த 50 ஆயிரம் டன் கழிவுகள் அகற்றப்பட்டன. அங்கு ரூ.2 கோடி மதிப்பில் காற்று மாசை கண்காணிக்கும் கருவி அமைக்கப்பட்டது.

கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க முயற்சி மேற்கொண்டேன்.

திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி மகளிா் உரிமைத் தொகை ரூ.2000-ஆக உயா்த்தி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என்றாா்.