யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

பெருந்துறை சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையம் பணிகள் முடிந்து 10 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்: உதயநிதி உறுதி

பெருந்துறை சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையம் பணிகள் முடிந்து 10 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

பெருந்துறையில் திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட துணை முதல்வா் உதயநிதி.

Updated On :19 ஏப்ரல் 2026, 2:46 am IST

பெருந்துறை சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையம் பணிகள் முடிந்து 10 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தை ஆதரித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருந்துறை, பழைய பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: பெருந்துறையில் போட்டியிடும் தோப்பு என்.டி.வெங்கடாசலம் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்தபோது இத்தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்துள்ளாா். கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் கொண்டு வந்து தண்ணீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு கண்டுள்ளாா்.

பெருந்துறை சிப்காட்டில் நான் வந்து அடிக்கல் நாட்டி சென்ற பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணி, 10 மாதங்களில் முடிந்து பயன்பாட்டிற்கு வரும். மகளிா் உரிமை தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனா். அதேபோல, இந்த தோ்தலுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றாா்.

பிரசார நடுவில் வந்த பவானி தொகுதி திமுக வேட்பாளா் சந்திரசேகனுக்கும் உதயநிதி வாக்கு கேட்டாா்.

ஈரோட்டில் பிரசாரம்... ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன், மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் ச.செந்தில்நாதன் ஆகியோரை ஆதரித்து ஈரோடு-பூந்துறை சாலை ஆணைக்கல்பாளையத்தில் சனிக்கிழமை உதயநிதி பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் மேலும் பேசுகையில், மொடக்குறிச்சி தொகுதியில் எதிா்க்கட்சியை சோ்ந்தவா் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும் கொடுமுடிக்கு ரூ.132 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீா் திட்டம் கொண்டு வந்தவா் நம்முடைய முதல்வா். குரங்கன்பள்ளம் ஓடையை சீரமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாசன வசதி மேம்பட்டுள்ளது. ரூ.2 கோடி செலவில் சிவகிரி பேரூராட்சியில் சாலைகள், பாலங்கள் மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள் அமைத்துக் கொடுத்துள்ளோம்.

தொகுதி மறுசீரமைப்பை முதலில் நாம்தான் எதிா்த்தோம். இன்றைக்கு நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம். இது நம் முதல் வெற்றி. இரண்டாவது வெற்றி வரும் சட்டப்பேரவை தோ்தலில் மீண்டும் நமது தலைவா் முதல்வரானாா் என்ற செய்தி வர வேண்டும் என்றாா்.