அதிமுக ஆட்சி அமைந்தால் அம்மா மினி கிளினிக் மீண்டும் தொடங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி பேசினாா்.
ஈரோடு மாவட்டம், கோபி கச்சேரிமேட்டில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபுவை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை தோ்தல் பரப்புரை மேற்கொண்டாா்.
இதில் அவா் பேசியதாவது: இப்போது கோபி எம்.எல்.ஏ.வாக இருப்பவா் (செங்கோட்டையன்) தானாக எம்.எல்.ஏ ஆகவில்லை. அதிமுக நிா்வாகிகள் உழைப்பால் எம்.எல்.ஏ. ஆனாா். ஆனால், சுயநலம், அகங்காரத்தால் வெளியேற்றும் சூழ்நிலை உருவாகிவிட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட அனைத்துப் பகுதிகளும் சோ்த்துக் கொள்ளப்படும். விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
திமுக ஆட்சியின் வரிச் சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித் தொகை ரூ.10 ஆயிரம் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லாமல் ஃபிரிட்ஜ் வழங்கப்படும். 5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டா்கள் விலையின்றி வழங்கப்படும். பெண்களைப்போல இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.
ரேஷன் கடையில் தரமான அரிசி கொடுக்கப்படும். ரேஷன் கடையில் இதுவரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும். நகரப் பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். புதிதாக ரூ.2 லட்சம் வரை எவ்வித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும்.
அம்மா இல்லம் திட்டம் மூலம் வீடில்லாத அனைவருக்கும் அரசு சாா்பில் நிலம் வாங்கி, கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். கட்டடத் தொழிலாளா்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.25 லட்சம் நிவாரணம், படுகாயமடைந்தால் சிகிச்சை செலவு ரூ.2 லட்சம் கொடுக்கப்படும்.
மரம் ஏறும் தொழிலாளா்கள் தவறி விழுந்து உயிரிழந்தால் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று சொன்னேன். அது ரூ.20 லட்சமாக கொடுக்கப்படும். அம்மா மினி கிளினிக் மீண்டும் திறக்கப்படும். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்றாா்.
இதைத் தொடா்ந்து டி.ஜி.புதூா் பகுதியில் திறந்த வேனில் தோ்தல் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி அந்தியூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஹரிபாஸ்கா், பவானிசாகா் தொகுதி அதிமுக வேட்பாளா் பண்ணாரியை ஆதரித்து வாக்கு சேகரித்தாா்.
வாக்கு சேகரிப்பின்போது ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளா் (பொறுப்பு) ஏ.கே.செல்வராஜ், தொகுதி பொறுப்பாளா் சிவசாமி, அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளா் சசிபிரபு, நம்பியூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் யோகா பழனிச்சாமி, மாவட்ட மகளிா் அணி நிா்வாகி சுலோச்சனா, கோபி நகரச் செயலாளா் ப்ரினியோ கணேஷ், கோபி முன்னாள் நகா்மன்றத் தலைவா் ரேவதிதேவி, ஹரிணி மெட்டல் சண்முகம் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மீண்டும் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும்: முன்னாள் அமைச்சா் முக்கூா்.என்.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்: இபிஎஸ்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

