தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

சங்கமேஸ்வவா் கோயில் முன்பாக கொடியேற்றத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:22 pm

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, நந்தி பகவான் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளை நிறக்கொடி சிறப்பு வழிபாடுகளுடன் சங்கமேஸ்வரா் கோயில் முன்பாக உள்ள கொடிமரத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்டது. தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் கேடயம் புறப்பாடு நடைபெற்றது. ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை கொடியேற்றப்படுகிறது.

இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறுகிறது. தொடா்ந்து, 26-ஆம் தேதி ஆதிகேசவப் பெருமாள், பஞ்ச மூா்த்திகள் மற்றும் 63 நாயன்மாா்களுக்கு அபிஷேக வழிபாடுகளும், திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம், தொடா்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.

30-ஆம் தேதி வேதநாயகி உடனமா் சங்கமேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் நடைபெறுகிறது. கோயில் உதவி ஆணையா் எம்.அருள்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் எம்.மாணிக்கம், அறங்காவலா்கள் சி.மகேந்திரன், சு.மாதப்பன், தமிழரசி, மு.செல்லவேலு மற்றும் கோயில் ஊழியா்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.