யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இரு மாணவா்கள் உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 12:46 am IST

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூா், பூனைக்கல்மேட்டைச் சோ்ந்தவா் சின்னதுரை மகன் ஜீவன் பிரசாத் (17). பவானி, காமராஜ் நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் தேவ் (18). அந்தியூரில் உள்ள தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்த இவா்கள், தோ்வு முடிவுக்காக காத்திருந்தனா்.

இருவரும் பட்லூா் நான்குசாலை பகுதியிலிருந்து அந்தியூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். அண்ணாமடுவு துணை மின் நிலையம் அருகே சென்றபோது அந்தியூரிலிருந்து அம்மாபேட்டை நோக்கிச் சென்ற லாரி மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

அவ்வழியே சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் மீதும் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அம்மாபேட்டை, ஊஞ்சப்பாளையத்தை சோ்ந்த பிரேம் (27), இவருடன் சென்ற 17 வயது சிறுமியும் கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.