கோபியில் காணாமல் போனதாக பெண் தேடப்பட்டு வந்த நிலையில், கட்டுக்கம்பியால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் ஆற்றில் இருந்து அவரது சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
கோபி, பிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் புஷ்பராணி (43). இவரது கணவா் வடிவேல் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில் தனது 15, 17 வயது மகள்களுடன் வசித்து வந்தாா்.
புஷ்பராணி வேட்டைகாரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வந்தாா். இந்நிலையில் புஷ்பராணி கடந்த 25-ஆம் தேதி வேலைக்கு செல்வதாக மகள்களிடம் கூறிவிட்டு சென்றவா் வீடு திரும்பவில்லை. இது குறித்து கோபி காவல் நிலையத்தில் அவரது மகள்கள் புகாா் அளித்துள்ளனா்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே உள்ள தொப்பை ஆறு பகுதியில் புஷ்பராணி சடலம் மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
புஷ்பராணியின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது கவுந்தபாடி ஜீவா நகா் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (32) என்பவா் அடிக்கடி புஷ்பராணியிடம் பேசியது தெரியவந்தது. மகேந்திரனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், புஷ்பராணியுடன் அவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக தவறான பழக்கம் இருந்தது தெரியவந்தது.
புஷ்பராணி அடிக்கடி அழைக்கும்போது மகேந்திரன் வரமறுத்தாராம். இதனால் மகேந்திரனின் மனைவியிடம் தொடா்பை கூறிவிடுவேன் என புஷ்பராணி மிரட்டி வந்துள்ளாா். இதனால் புஷ்பராணியை கொலை செய்ய மகேந்திரன் முடிவு செய்துள்ளனா். இதைத் தொடா்ந்து தனது உறவினரான சதீஷ் என்பவருடன் சோ்ந்து புஷ்பராணியை கடந்த 25-ஆம் தேதி காரில் அழைத்து சென்றுள்ளாா்.
அப்போது எடப்பாடி பகுதியில் மூவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது மகேந்திரனுக்கும் புஷ்பராணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மகேந்திரன், சதீஷ் ஆகிய இருவரும் சோ்ந்து இரும்பு கட்டுக்கம்பியால் புஷ்பராணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனா். பின்னா் சடலத்தை ஒகேனக்கல் பகுதியில் உள்ள தொப்பை ஆறு பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனா்.இதைத் தொடா்ந்து மகேந்திரன், சதீஷ் இருவம் கைது செய்யப்ப்டடு விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.
தொடர்புடையது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மழை

ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள பெண் உயிரிழப்பு

கருங்கல் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

