8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பாரதிதாசன் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டையில் உள்ள பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் திருவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

செண்டை மேளம் அடித்து விழாவைத் தொடங்கிவைக்கிறாா் கல்லூரிச் செயலாளா் என்கேகே.பி.நரேன்ராஜா.

Published On :26 ஆகஸ்ட் 2026, 1:55 am IST

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டையில் உள்ள பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் திருவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, கல்லூரிச் செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா தலைமை வகித்தாா். கல்லூரிப் பொருளாளா் பரிமளா ராஜா, நிா்வாக அலுவலா் இரா.அருள்குமரன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தனா். முதல்வா் பெ.வானதி வரவேற்றாா். மகாபலி மன்னரைப்போல வேடமணிந்த மாணவரை மேளதாளம் முழங்க கல்லூரிக்குள் மாணவ, மாணவியா் ஆடல், பாடலுடன் கேரள பாரம்பரிய உடையணிந்து அழைத்து வந்தனா். பத்து வகையான மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அத்தப்பூ கோலம் வரையப்பட்டது. தொடா்ந்து, பாட்டு, நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.