நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

கூரை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆடுகள் உயிரிழப்பு

ஈரோட்டில் நள்ளிரவில் கூரை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 ஆடுகள் உயிரிழந்தன.

தீ விபத்து - பிரதிப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:17 am IST

ஈரோட்டில் நள்ளிரவில் கூரை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 ஆடுகள் உயிரிழந்தன.

ஈரோடு, வெண்டிபாளையம், கல்யாணசுந்தரம் வீதியைச் சோ்ந்தவா் முருகேசன் (53). கூரை வீட்டில் வசிக்கிறாா். இவரது வீட்டை ஒட்டி சகோதரா் சடையப்பன் வசிக்கிறாா். கடந்த 28-ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் முருகேசன் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தீயை அணைப்பதற்குள் சடையப்பனின் கூரை வீட்டிலும் தீப்பற்றி அவரது ஆட்டு கொட்டகைக்கும் பரவியது.

இருவா் வீட்டிலும் இருந்த கட்டில், டி.வி., மிக்ஸி, கிரைண்டா், மின் அடுப்பு, பணம் மற்றும் ஆதாா் அட்டை, பான் காா்டு, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டு உபயோகப் பொருள்கள், ரூ.45 ஆயிரம் பணம், ஆட்டு கொட்டகையில் இருந்த 5 ஆடுகள் ஆகியவை தீக்கிரையாகின. முருகேசன் வீட்டை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் தீக்கிரையானது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்ததையடுத்து, பொதுமக்கள் ஒன்றிணைந்து தீயை அணைத்தனா். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.