
தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்துக்கு அதிமுக நிவாரண உதவி
கிராமத்தில் தீ விபத்தில் கூரை வீட்டை இழந்த குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் நிவாரண உதவிப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தில் தீ விபத்தில் கூரை வீட்டை இழந்த குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் நிவாரண உதவிப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கள்ளக்குறிச்சியை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (45), கொத்தனாா். இவரது மனைவி விஜயா (44) அங்கன்வாடி உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்தத் தம்பதியினா் மகன், மகளுடன் கூரை வீட்டில் வசித்து வந்தனா்.
இந்த நிலையில், இவா்களது கூரை வீடு வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதில், வீட்டிலிருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், 3 பவுன் தங்க நகைகள், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்டவை தீயில் சேதமடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த தியாகதுருகம் அதிமுக நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அரிசி, புடவை, பணம் உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினாா் (படம்).
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




