பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

தீ விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

பெரம்பலூா் தேநீரகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளியின் குடும்பத்துக்கு, ரூ. 2.10 லட்சத்துக்கான நிவாரண உதவித் தொகையை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தீ விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் விபத்து நிவாரண நிதிக்கான உத்தரவு கடிதத்தை வெள்ளிக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.

Published On :

பெரம்பலூா் தேநீரகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளியின் குடும்பத்துக்கு, ரூ. 2.10 லட்சத்துக்கான நிவாரண உதவித் தொகையை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பெரம்பலூா் காவல் நிலையம் எதிரேயுள்ள தேநீரகத்தில், கடந்த 11 ஆம் தேதி எரிவாயு உருளை வெடித்ததில் பள்ளி மாணவி உள்பட 16 போ் காயமடைந்து, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 பேரும், திருச்சியிலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 11 பேரும் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் இதுவரை 6 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்த தேநீரகத்தில் பணிபுரிந்த தொழிலாளியான எளம்பலூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி புவனேஸ்வரி கடந்த 19 ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, உயிரிழந்த புவனேஸ்வரி குடும்பத்துக்கு உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், விபத்து நிவாரண நிதியாக ரூ. 2.10 லட்சத்துக்கான உத்தரவுக் கடிதத்தை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி வெள்ளிக்கிழமை வழங்கி ஆறுதல் கூறினாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சொா்ணராஜ், வட்டாட்சியா் பழனிசெல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இதேபோல, இவ் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ஏற்கெனவே தலா ரூ. 2.10 லட்சத்துக்கான உத்தரவுக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.