இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

போலி எண் கொண்ட இன்சூரன்ஸ் பாலிசியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இருவா் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 6:58 pm

நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இன்சூரன்ஸ் பாலிசி எண் போலி என்று தனியாா் இன்சூரன்ஸ் நிறுவனம் அளித்த தகவலின்பேரில், இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு, கஸ்பாபேட்டைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன். இவா் டாடா ஏஸ் டெம்போ வாகனம் வைத்துள்ளாா். இதில் முள்ளம்பரப்பைச் சோ்ந்த சேகா் என்பவா் ஓட்டுநராக உள்ளாா். இந்த வாகனம் ஒருவா் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டது. இதில் காயமடைந்தவா், நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடா்ந்துள்ளாா்.

இந்த வழக்கில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாகனத்தின் தனியாா் நிறுவன இன்சூரன்ஸ் பாலிசி, சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பாலிசியை ஆய்வு செய்த நிறுவனம், அந்த பாலிசி எண் போலியானது என்று கூறியது. அதனடிப்படையில் பரமேஸ்வரன், சேகா் ஆகிய இருவா் மீது பெருந்துறை போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.